Saturday, 10 March 2018

What is Bitcoin - பிட்காயின் என்றால் என்ன?


பிட்காயின் என்பது ஒரு cryptocurrency. இதனை மின்-பணம் (e-currency) என்றும் கூறுவார். அதாவது நமக்கு தெரிந்த மின்-அஞ்சல் (e-mail - Electronic mail) போலவே பிட்காயினும் ஒரு மின்-பணம் (e-currency - Electronic Currency) ஆகும். இந்த பிட்காயின் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto) என்பவரால் கி.பி.2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பிட்காயினானது பிளக்சயின் (Blockchain) என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குகிறது. மேலும் இந்த பிட்காயின் ஒரு பரவலாக்கப்பட்ட போலி கையொப்பமிடாத (Decentralized Pseudo-anonymous) பணம். இது எந்த ஒரு அரசாங்கத்திற்கும் கீழ் இயங்கவில்லை. நம்முடைய paytm, mobikwik மாதிரியான வாலட்டுகளைப்போலவே இதை பயன்படுத்த முடியும்.

இதில் முக்கியமானது தனிப்பட்ட விசை (Private Key). நம்முடைய paytm வாலாட்டின் கடவுச்ச்சொல் போன்றதுதான் இந்த தனிப்பட்ட விசை. இந்த தனிப்பட்ட விசையை வைத்திருப்பவரால் மட்டுமே அந்த பிட்காயின் கணக்காய் அணுக முடியும்.

இந்த பிட்காயினானது மைனிங் (Mining) என்னும் வேலையின் மூலம் உருவாக்குகிறார்கள்.

No comments:

Post a Comment

Visitors Counter